0
வடமேற்கு இலண்டனில் உள்ள ஒரு பகுதியளவு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் மருத்துவ உதவியாளர்களிடம் சிகிச்சை பெற்றுள்ளனர்.
கிளைபர்ன், கிறைஸ்ட்சர்ச் தெருவில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, நள்ளிரவுக்குப் பிறகு சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் மற்றும் எட்டு இயந்திரங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக இலண்டன் தீயணைப்பு படை (LFB) தெரிவித்துள்ளது.
தீ விபத்து இரண்டு தளங்களைக் கொண்ட ஒரு பகுதியளவு அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தையும் கூரையையும் அழித்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே ஐந்து பேர் அந்த இடத்திலிருந்து தப்பித்த நிலையில் அவர்களுக்கு இலண்டன் ஆம்புலன்ஸ் சேவை சிகிச்சை அளித்தது.
அத்துடன், அதிகாலை 4 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக இலண்டன் தீயணைப்பு படை தெரிவித்தது.