• Mon. Mar 3rd, 2025

24×7 Live News

Apdin News

அடுத்த கட்ட கடனுதவியை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் !

Byadmin

Mar 2, 2025


நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலரை உள்ளடக்கிய 4 ஆவது தவணைக்கான கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது.

இலங்கையுடனான நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை நேற்று வெள்ளிக்கிழமை (28) ஆராய்ந்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு அடுத்த கட்ட கடனுதவியை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்குக் கிடைக்கப் பெறும் கடனுதவி 1.34 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கின்றது.

By admin