• Thu. Nov 28th, 2024

24×7 Live News

Apdin News

அடைமழையால் வெள்ளக்காடானது வடக்கு! – இதுவரை 90 ஆயிரத்து 821 பேர் பாதிப்பு

Byadmin

Nov 27, 2024


வடக்கு மாகாணத்தில் பொழியும் அடைமழை காரணமாக 28 ஆயிரத்து 143   குடும்பங்களைச் சேர்ந்த 90 ஆயிரத்து 821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட செயலாளர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 460 குடும்பங்களைச் சேர்ந்த 29 ஆயிரத்து 816 பேர் பாதிப்படைந்துள்ளனர். 29 இடைத்தங்கல் முகாம்களில் 571 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 954 பேர்  தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 272 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 287 பேர் பாதிப்படைந்துள்ளனர். 61 பாடசாலைகளில் 377 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 266 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 104 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 374 பேர் பாதிப்படைந்துள்ளனர். 4 இடைத்தங்கல் முகாம்களில் 141 குடும்பங்களைச் சேர்ந்த 520 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 15  ஆயிரத்து 205  குடும்பங்களைச் சேர்ந்த 52 ஆயிரத்து 487 பேர் பாதிப்படைந்துள்ளனர். 43 இடைத்தங்கல் முகாம்களில் ஆயிரத்து 240 குடும்பங்களைச் சேர்ந்த 4  ஆயிரத்து 128 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வவுனியா  மாவட்டத்தில் 457 குடும்பங்களைச் சேர்ந்த 867 பேர் பாதிப்படைந்துள்ளனர். 3 இடைத்தங்கல் முகாம்களில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 202 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய வடக்கில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 143 குடும்பங்களைச் சேர்ந்த 90 ஆயிரத்து 821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 290 இடைத்தங்கல் முகாம்களில் 2 ஆயிரத்து 384 குடும்பங்களைச் சேரந்த 8 ஆயிரத்து 70 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் மாவட்ட செயலாளர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

The post அடைமழையால் வெள்ளக்காடானது வடக்கு! – இதுவரை 90 ஆயிரத்து 821 பேர் பாதிப்பு appeared first on Vanakkam London.

By admin