• Thu. Mar 20th, 2025

24×7 Live News

Apdin News

அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் 6 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் | Water supply suspended for 6 days

Byadmin

Mar 20, 2025


சென்னை: கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை முதல் 26-ம் தேதி வரை சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், நாளை (மார்ச் 21) முதல் 26-ம் தேதி வரை அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

21, 23, 25-ம் தேதிகளில் ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, வெட்டுவான்கேணி, உத்தண்டி ஆகிய பகுதிகளிலும், 22, 24, 26-ம் தேதிகளில் பெருங்குடி, பாலவாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், ஒக்கியம்-துரைபாக்கம் பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, போதுமான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற, வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். குடிநீர் தொட்டிகள், லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தடையின்றி சீராக நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வரி செலுத்த கடைசி நாள்: சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்துக்கு நுகர்வோர் செலுத்த வேண்டிய குடிநீர், கழிவுநீர் அகற்று வரி, கட்டணங்கள் உள்ளி்ட்டவற்றை இம்மாதம் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

குடிநீர் வாரியத்தின் பகுதி அலுவலகங்கள், தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில் காசோலை, வரைவோலை மூலமாக செலுத்தலாம். https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலைதளம் மற்றும் இ-சேவை மையங்கள், வசூல் மையங்களில் உள்ள க்யூஆர் குறியீடு மற்றும் பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தியும் செலுத்தலாம் என்றும் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.



By admin