• Sat. Mar 22nd, 2025

24×7 Live News

Apdin News

அணிக்கு 6 பேர் கொண்ட “ பிரிண்டர்ஸ் சிக்ஸஸ் – 2025”

Byadmin

Mar 22, 2025


இலங்கை அச்சகத்தார் சங்கம் 12வது தடவையாக ஏற்பாடு செய்துள்ள இலங்கை அச்சகத்தார் சங்க நிறுவனங்களுக்கு இடையிலான அணிக்கு 6 பேர் கொண்ட “ பிரிண்டர்ஸ் சிக்ஸஸ் 2025” மென்பந்து கிரிக்கெட் தொடர் எதிர்வரும் சனிக்கிழமை (29) கெழும்பு என்.சீ.சீ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆண்கள் பிரிவில் 54 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 அணிகளும் என  மொத்தமாக 64 அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளன.

இப்போட்டி தொடருக்கான அனுசரணை மாதிரிப் படிவங்களைக் கையளிக்கும் நிகழ்வும், வெற்றி கிண்ணம் மற்றும் ஜேர்ஸி அறிமுக நிழ்வும் கொழும்பு 03ல் அமைந்துள்ள வீ.எம்.டி மண்டபத்தில்  புதன்கிழமை (19) சங்கத்தலைவர் அனில் காரியவசம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சங்கத்தின் பொது செயலாளர் எம் செந்தில்நாதன், பிரண்டர்ஸ் சிக்ஸஸ் போட்டி குழுத் தலைவர் உதய ஹெட்டியாராச்சி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

(படப்பிடிப்பு – ஜே. சுஜீவகுமார்)

By admin