• Tue. Aug 18th, 2026

24×7 Live News

Apdin News

‘அணுகுண்டு வீச்சை தடுக்கும் சக்தி அவர் ஒருவருக்கே இருந்தது’ – அமெரிக்க விஞ்ஞானி பிலிப் மோரிசன் கூறியது என்ன?

Byadmin

Aug 18, 2026


அமெரிக்க இயற்பியலாளர் பிலிப் மோரிசன், அணுகுண்டு வீச்சு, நாகசாகி, ஜப்பான்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஃபியோனா மெக்டொனால்ட்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று, புளூட்டோனியம் அணுகுண்டு ஜப்பானின் நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்டது. இதன் மூலம் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

30 ஆண்டுகளுக்குப் பிறகு, பிபிசிக்கு அளித்த பேட்டியில், அந்த குண்டைத் தயாரித்து பொருத்த உதவிய அமெரிக்க இயற்பியலாளர் ஒருவர், அந்த வெடிப்பை ஏன் தடுக்க முடியவில்லை என்பதையும், அதற்குப் பிறகான திட்டங்களையும் வெளிப்படுத்தினார்.

“மனித குலத்தின் மீது அக்கறை இல்லாததால் இது நடக்கவில்லை. மனித குலத்தின் மீதான அக்கறையால்தான் நடந்தது. ஒருவேளை அதுதான் பாவமாக இருக்கலாம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாகசாகி மீது நடத்தப்பட்ட அணுகுண்டு வீச்சில் பங்கேற்ற முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க இயற்பியலாளர் பிலிப் மோரிசன் , அதற்கு முந்தைய நாட்கள் மற்றும் வாரங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பிபிசியிடம் வெளிப்படையாகப் பேசினார்.

மோரிசன், முதல் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்காக நேச நாடுகள் மேற்கொண்ட மிக ரகசியமான திட்டமான ‘மன்ஹாட்டன் திட்டத்தில்’, லாஸ் அலமோஸ் ஆய்வகத்தில் பணியாற்றினார்.

By admin