1
தனது நாட்டை அணு ஆயுத சக்திவாய்ந்த நாடாக அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும் என வட கொரிய தலைவரின் சகோதரி கோரிக்கை விடுத்துள்ளார்.
டிரம்ப்பின் முதல் ஆட்சிக் காலத்தைப் போல வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிடச் செய்வதற்காக பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுத்தால், அதை ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
“கடந்த காலத்தை விடுத்து புதிய விடயங்களை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்கா நிலைமைகளை நன்கு புரிந்துகொண்டு கையெழுத்து நீட்சிக்கு வர வேண்டும். இவற்றைத் தவிர்த்து பழைய நிலையை மீண்டும் முயற்சி செய்வது பொருத்தமல்ல என்றும் அவர் கூறினார்.