• Tue. May 13th, 2025

24×7 Live News

Apdin News

“அணு ஆயுத மிரட்டல்களின் பாதுகாப்பில் பயங்கரவாதம்” – இந்தியா சகித்துக் கொள்ளாது என பிரதமர் மோதி உரை

Byadmin

May 13, 2025


 நரேந்திர மோதி

பட மூலாதாரம், PIB INDIA/YOUTUBE

பஹல்காம் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

”ஏப்ரல் 22ம் தேதியன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், அப்பாவி பொதுமக்களை அவர்களது குடும்பத்தின் முன், அவர்களுடைய குழந்தைகளின் கண் முன்னால் கொல்லப்பட்டனர். இது நாட்டின் நம்பிக்கையை உடைப்பதற்கான செயல், இது என் மனதில் மிகப்பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது.” என்றார் நரேந்திர மோதி.

இந்திய ராணுவத்திற்கு அனைத்து அதிகாரத்தையும் கொடுத்ததாக கூறிய மோதி, ” நமது நாட்டு பெண்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தோம். மே 6 மற்றும் 7ம் தேதிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நம்முடைய மன உறுதியை நாட்டு மக்கள் பார்த்தனர். பயங்கரவாத முகாம்கள் மீதும் பயங்கரவாதிகள் மீதும் மிகப்பெரிய நடவடிக்கை எடுத்தோம்.” என்றார்.

‘பயங்கரவாத தாக்குதல்களுக்கு தொடர்பு’

மேலும் தொடர்ந்த நரேந்திர மோதி,” இந்திய ராணுவமும், இந்தியாவின் டிரோன்களும் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தின. பஹாவல்பூர், முரிட்கே போன்ற பயங்கரவாத முகாம்கள், ஒருவிதத்தில் உலகளாவிய பயங்கரவாத மையங்களாக இருந்தன. 9/11, லண்டன் டியூப் வெடிகுண்டு, இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்களுக்கு இந்த பயங்கரவாத முகாம்களுடன் தொடர்பு உள்ளன” என்றார்

By admin