• Sun. Jan 5th, 2025

24×7 Live News

Apdin News

அண்ணா பல்கலைக்கழகம்: தீச்சட்டி ஏந்தியும் அம்மனுக்கு மிளகாய் சாற்றியும் பாஜக மகளிரணி போராட்டம்

Byadmin

Jan 3, 2025


பாஜக மகளிரணி போராட்டம்

பட மூலாதாரம், TN BJP/X

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அடையாறு பகுதியில் உணவகம் நடத்தி வரும் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழக அரசியல் அரங்கில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் நூதன போராட்டம் நடைபெற்றது.

அந்த வகையில், மதுரையில் பாஜக மகளிரணியினர் கையில் தீச்சட்டி சுமந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கண்ணகி போன்று வேடமணிந்த ஒருவர், கையில் சிலம்புகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார். கோவில் ஒன்றில் அம்மனுக்கு மிளகாய் சாற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகளிரணியினர் பேரணியாக சென்று முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் அரசுக்கு எதிரான முழக்கங்களை பாஜகவினர் எழுப்பினர்.

இதையடுத்து, தடையை மீறி பேரணியில் ஈடுபட்டதாக, பாஜக மகளிரணியினரை கைது செய்த போலீசார், அவர்களை திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

By admin