• Mon. Sep 15th, 2025

24×7 Live News

Apdin News

அண்ணா வாழ்க்கை வரலாறு: தமிழ்நாடு அரசியலில் திராவிட இயக்கம் மூலம் அண்ணா செய்த மாற்றங்கள் என்ன?

Byadmin

Sep 15, 2025


அண்ணாதுரை, அண்ணா, பேரறிஞர் அண்ணா, திமுக, அண்ணா பிறந்தநாள்

பட மூலாதாரம், X/MK Stalin

(2021-ஆம் ஆண்டு வெளியான கட்டுரை அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மறுபகிர்வு செய்யப்படுகிறது. )

காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை.

1909 செப்டம்பர் 15ம் தேதி இந்தப் பெயருக்கு உரியவர் காஞ்சிபுரத்தில் ஓர் எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தபோது அது அடுத்த தெருவுக்கு கூட செய்தி இல்லை. நடராஜன் – பங்காரு அம்மாள் இணையருக்கு ஒரு மகன். அவ்வளவுதான்.

1969 பிப்ரவரி 3-ம் தேதி அவர் இறந்தபோது அது பல கோடி மக்களுக்குப் பெருந்துயரம்.

By admin