• Sun. Sep 14th, 2025

24×7 Live News

Apdin News

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பதுதான் திமுக அரசின் சாதனை: இபிஎஸ் விமர்சனம் | eps slams dmk in coimbatore

Byadmin

Sep 14, 2025


கோவை: அ​தி​முக ஆட்​சி​யில் தொடங்​கப்​பட்ட திட்​டங்​களை ஸ்டிக்​கர் ஒட்டி திறப்​பது​தான் திமுக அரசின் சாதனை என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

கோவை சிங்​காநல்​லூர் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் நேற்று பொது​மக்​களிடையே அவர் பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் கோவை​யில் தொழில் வளம் சிறப்​பாக இருந்​தது. 3 ஷிப்ட்​களில் தொழிலா​ளர்​கள் பணி​யாற்​றினர். தற்​போது ஒரு ஷிப்ட்​டில் மட்​டும்​தான் பணி​யாற்​றுகின்​றனர். அதி​முக ஆட்​சி​யில் விமான நிலைய விரி​வாக்​கத்​துக்கு பணி​கள் முடிவு பெறும் நிலை​யில், திமுக ஆட்​சி​யில் திட்​டம் முடங்​கி​விட்​டது. அதி​முக ஆட்​சிக்கு வந்த பின்​னர் விமான நிலைய விரி​வாக்​கப்பணி முடிக்​கப்​படும்.

கோவை​யில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிப்​புப் பணி அதி​முக ஆட்​சி​யில் தொடங்​கியநிலை​யில், அத்​திட்​டத்தை முடக்கி வைத்​துள்​ளனர். திமுக ஆட்​சி​யில் புதி​தாக எந்த திட்​டத்​தை​யும் தொடங்​க​வில்​லை. அதி​முக ஆட்​சி​யில் தொடங்​கப்​பட்ட திட்​டங்​களை ஸ்டிக்​கர்ஒட்டி திறப்​பது​தான் திமுக அரசின் சாதனை.

தமிழகத்​தில் தற்​போது சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​து​விட்​டது. சொத்​து​வரி, மின் கட்டண உயர்​வால் மக்​கள் பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். கோவை தொழில் நிறு​வனத்​தினர் வேறு மாநிலத்​துக்கு செல்​கின்​றனர். கட்​டு​மானப் பொருட்​கள் விலை கடுமை​யாக உயர்ந்​து​விட்​டது. அரசு மருத்​து​வ​மனை​களில் மக்​களுக்கு உரிய சிகிச்சை கிடைப்​ப​தில்​லை. இவ்​வாறு அவர் பேசி​னார். முன்​னாள் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணி, எம்​எல்​ஏ-க்​கள் அம்​மன் அர்ச்​சுணன், கே.ஆர்​.ஜெய​ராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



By admin