• Tue. Sep 16th, 2025

24×7 Live News

Apdin News

அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்திய பாஜக அரசுதான்: பழனிசாமி தகவல் | Palaniswami says central bjp govt at saved the aiadmk regime

Byadmin

Sep 16, 2025


சென்னை: அதி​முக ஆட்​சியை காப்​பாற்​றியது மத்​திய பாஜக அரசு​தான். அதற்கு நன்​றி​யுடன் இருக்​கிறோம் என்று அண்ணா பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார்.

அதி​முக சார்​பில் அண்​ணா​வின் 117-வது பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டம், வடபழனி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் கட்​சி​யின் பொதுச்​ செயலாளர் பழனி​சாமி பங்​கேற்று ஏழை, எளியோ​ருக்கு நலத்திட்ட உதவி​களை வழங்​கி​னார். கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: கடமை, கண்​ணி​யம், கட்​டுப்​பாடு என்ற தாரக மந்​திரத்தை நமக்கு போதித்​தவர் பேரறிஞர் அண்​ணா.

சிறந்த நுண்​ணறி​வு, எழுத்​து, மொழிப் புலமை, மேடைப் பேச்​சு, அரசியல் நாகரி​கம், தொண்​டர்​களை ஈர்க்​கும் அன்​பு, போராட்ட குணம், பகுத்​தறிவு சிந்​தனை, ஆளு​மைத்​திறன், தலை​மைப் பண்​பு,எளிமை​யான வாழ்வு என அனைத்​தி​லும் அன்​னாந்து பார்க்​க வைக்கக் கூடிய​வர்​தான் அண்​ணா. ஏழை​யின் சிரிப்​பில் இறைவனை காண்​போம் என்​றார். அவரது மறைவுக்கு பிறகு, அவரது கனவு​களை நனவாக்க ஏராள​மான திட்​டங்​கள் எம்​ஜிஆர் கொண்​டு​வந்​தார்.

2011 முதல் 2021 வரையி​லான அதி​முக ஆட்​சி, பொற்​கால ஆட்​சி. இதில் 17 அரசு மருத்​து​வக் கல்​லூரி​கள் திறக்​கப்​பட்​டன. திமுக​வின் 4 ஆண்டு ஆட்​சி​யில் 1 மருத்​து​வக் கல்​லூரியைக்​கூட கொண்​டு​வர​வில்​லை. திமுக ஆட்​சி​யில் மக்​களுக்கும், காவலர்​

களுக்​கும் பாது​காப்பு இல்​லை. இந்த ஆட்​சி​யில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​கெட்​டுள்​ளது. யாருக்​கும் பாது​காப்பு இல்​லை. 6 காவலர்​கள் கொல்​லப்​பட்​டுள்​ளனர். ஏழைகளின் வறுமையை பயன்​படுத்தி சிறுநீரகத்தை திருடு​கின்​றனர்.

அதி​முக ஆட்​சிக்கு வந்​ததும், திருமண உதவி திட்​டம், அம்மா இரு சக்கர வாகன திட்​டம், மடிக்​கணினி திட்​டம் ஆகியவை மீண்​டும் செயல்​படுத்​தப்​படும். இன்​றைக்கு சிலர் அதி​முகவை அழிக்​கப் பார்க்​கிறார்​கள். அதி​முகவை எவராலும் ஒன்​றும் செய்ய முடி​யாது. எங்​களுக்கு ஆட்சி அதி​காரத்​தை​விட தன்​மானம்​தான் முக்​கி​யம். அதை இம்​மியள​வும் விட்​டுக் கொடுக்க மாட்​டேன்.

அதி​முக ஆட்​சியை கவிழ்க்க வாக்​களித்​தவர்​களை​யும் மன்​னித்து துணை முதல்​வர் பதவி கொடுத்​தோம். அவர்​கள்​தான் அதி​முக​வினரின் கோயி​லான எம்​ஜிஆர் மாளி​கையை தாக்​கினர். இவர்​களை எல்​லாம் கட்​சி​யில் சேர்க்க வேண்​டு​மா? நான் எதற்​கும் அஞ்ச மாட்​டேன். யாரும் என்னை மிரட்​டிப் பார்க்க முடி​யாது.

சிலர் அதி​முகவை கபளீகரம் செய்து ஆட்​சியை கைப்​பற்​றப் பார்த்​தார்​கள். அப்​போது ஆட்​சியை காப்​பாற்​றிக் கொடுத்​தது மத்​திய ஆட்​சி​யில் இருக்​கும் பாஜக​தான்​. அவர்​களுக்கு நன்​றியோடு இருக்​கிறோம். கூட்​டணி சேரு​வது என்​பது, கட்சி ஆட்​சிக்கு வர வேண்​டும். எதிரி​களை வீழ்த்த வேண்​டும் என்​ற அடிப்​படை​யில் தான். அதி​முகவை காப்​பாற்ற அனை​வரும் துணிந்து நிற்க வேண்​டும். அதி​முக​வுக்கு எவர் துரோகம் செய்​தா​லும் நடுரோட்​டில் நிற்​பார்​கள், விலாசம் இல்​லாமல் போய்​விடு​வார்​கள். இவ்​வாறு அவர் பேசினார்.



By admin