• Sat. Mar 28th, 2026

24×7 Live News

Apdin News

அதிமுக கூட்டணியில் பாஜக ஆதிக்கமா? சிறிய கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியால் எழும் கேள்விகள்

Byadmin

Mar 28, 2026


அதிமுக கூட்டணியில் பாஜக ஆதிக்கமா? சிறிய கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியால் எழும் கேள்விகள்

பட மூலாதாரம், EPSTamilNadu/X

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 2016-ஆம் ஆண்டு சிறிய கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட அதிமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்ட நிலை அடுத்த 10 ஆண்டுகளில் மாறியுள்ளது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளில் சில தாமரை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்திருப்பது அதிக கவனம் பெற்றுள்ளது.

தமாகா, புதிய நீதிக்கட்சி (ஓரிடத்தில் மட்டும்) ஆகிய கட்சிகள் தாமரை சின்னத்தில் களம் காண்கின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக செல்வாக்கு செலுத்துவதாக எதிர் தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டை இது உறுதிப்படுத்துகிறதா? இதுகுறித்து அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் என்ன சொல்கின்றன? அந்த கட்சிகள் கூறும் காரணம் என்ன?

தமாகா, புதிய நீதிக் கட்சி தாமரை சின்னத்தில் போட்டி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளிலும் தாமரை சின்னத்திலேயே போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் நிற்காமல் தாமரை சின்னத்தில் நிற்பது ஏன் என்ற கேள்விக்கு ஜி.கே.வாசன் நேற்று (மார்ச் 27ஆம் தேதி) விளக்கமளித்தார்.

“கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அதிமுக கூட்டணியில் நீடித்தது. தேர்தல் நெருங்கும்போது எங்களுக்குக் கிடைக்கக்கூடிய சைக்கிள் சின்னம், தற்போது போலவே அப்போதும் கிடைக்கவில்லை. அதன் அடிப்படையிலேயே நேரடியாகக் கூட்டணி அமைத்திருந்த அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டோம். அதுதான் கூட்டணிக்கு உள்ள நியாயமும்கூட.

By admin