சென்னை: அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த ப.சுதாகர், 103-வது வடக்கு அதிமுக வட்டச் செயலாளராக இருந்தார். இவர் அண்ணாநகர் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின், கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாகவும், கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் ப.சுதாகர் செயல்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.