• Fri. Sep 12th, 2025

24×7 Live News

Apdin News

அதிமுக – பாஜக கூட்டணியில் பிளவு ஏற்படவில்லை: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம் | Nainar Nagendran says there is no split in the AIADMK-BJP alliance

Byadmin

Sep 12, 2025


மதுரை: அ​தி​முக-​பாஜக கூட்​ட​ணி​யில் பிளவு இல்லை என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார்.

மதுரை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் அதி​முக வலு​வாக உள்​ளது. பழனி​சாமி செல்​லும் இடமெல்​லாம் மக்​கள் ஆரவாரத்​துடன் பங்​கேற்​று, அவருக்கு ஆதரவு கொடுத்து வரு​கின்​றனர். இதைப் பார்த்து திமுக​வினர் பொறாமை​யில் உள்​ளனர். அதி​முக​வில் பிளவு வர வேண்​டும் என்று அவர்​கள் கருதுகின்​றனர். அதனால், அதி​முக​வில் பிளவு ஏற்​பட்​டுள்​ள​தாக பொய் பிரச்​சா​ரம் செய்​கின்​றனர்.

அதி​முகவை உடைக்க வேண்​டிய அவசி​யம் பாஜக​வுக்கு இல்​லை. பழனி​சாமியை நாங்​கள் கூட்​டணி தலை​வ​ராக ஏற்​றுக்​கொண்​டுள்​ளோம். மத்​திய அமைச்​சர் அமித்​ஷா- செங்​கோட்​டையன் சந்​திப்பு குறித்து எனக்கு முழு​மை​யாக தெரி​யாது. அமித்​ஷாவை செங்​கோட்​டையன் சந்​தித்​த​தால், எங்​கள் கூட்​ட​ணியில் எந்த பிரச்​சினை​யும் இல்லை.

பாஜக அவசர சிகிச்​சைப் பிரி​வில் இருப்​ப​தாக உதயநிதி கூறி​யுள்​ளார். யார் ஐசி​யுவுக்கு செல்​கிறார்​கள் என்​பது 2026-ல் தெரி​யும். பழனி​சாமி குறித்து டிடி​வி.​ தினகரன் கூறியது அவரது சொந்​தக் கருத்​து. ஓ.பன்​னீர்​செல்​வத்தை நான் எந்த நேரத்​தி​லும் அழைத்​துப் பேசுவேன். எனக்கு யாருட​னும் கருத்து வேறு​பாடு கிடை​யாது.

டிடி​வி.​தினகரன் மீது எனக்கு வெறுப்பு இல்​லை. தேவைப்​பட்​டால் அவருட​னும் பேசுவேன். பள்​ளிக்கு விடு​முறை​விட்டு ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாம் நடத்​தி​யது கண்​டிக்​கத்​தக்​கது. திமுக வலு​வாக இருப்​ப​தாக அண்​ணா​மலை கூற​வில்​லை. திமுக வலு​வாக இருக்​கிறது என்று உதயநிதி போன்​றவர்​கள் சொல்லி வரு​வ​தாகத்​தான் அவர் தெரி​வித்​துள்​ளார். தவெக தலை​வர் விஜய் சனிக்​கிழமை​களில் பிரச்​சா​ரம் செய்​யப்​ போவ​தாக அறி​விப்பு வெளி​யாகி உள்​ளது.

சனிக்​கிழமை​யின் மகிமை எல்​லோருக்​கும் தெரி​யும். பிரதமர் மோடி, அமித்​ஷா, பாஜக தேசிய தலை​வர் நட்டா ஆகியோர் என் மீது அளவற்ற அன்​பும், பாச​மும் வைத்​துள்​ளனர். நான் பாஜக தலை​வர் பதவியி​லிருந்து விலக வேண்​டிய அவசி​யம் இல்​லை. அதி​முக, பாஜக கூட்​ட​ணி​யில் பிளவு இல்​லை. கூட்​ட​ணித் தலை​வர் பழனி​சாமி என்ன சொல்​கிறாரோ அது​தான் நடக்​கும். எனவே, பிளவு என்ற பேச்​சுக்கே இடமில்​லை. இவ்​வாறு அவர் கூறி​னார்​.



By admin