• Fri. Jan 23rd, 2026

24×7 Live News

Apdin News

அதிமுக – பாஜக கூட்டணி கூட்டத்தில் ஒரே மேடையில் தோன்றிய எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் பேசியது என்ன?

Byadmin

Jan 23, 2026


நரேந்திர மோதி, எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Narendra Modi/ Youtube

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் மோதி பங்கேற்றுள்ளார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலை தனித்தனியே கூட்டணி அமைத்து சந்தித்த அதிமுகவும் பாஜகவும் அதன் பிறகு மீண்டும் இணைந்தன. இரு கட்சிகளும் இணைந்தே வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கப் போவதாக, கடந்தாண்டு ஏப்ரல் மாதமே மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா அறிவித்தார்.

இதையடுத்து, பெரிதாக வேறெந்த கட்சிகளும் இந்த கூட்டணியில் இணையாத நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இக்கூட்டணியில் இணைந்தார்.

இந்நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்காக சமீபத்தில் தமிழகம் வந்திருந்தார் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல். இவருடைய முன்னிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஜனவரி 21 அன்று அக்கூட்டணியில் இணைந்தார்.

“எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் கூட்டணியில் தான் இருக்க மாட்டேன்” என தொடர்ந்து கூறிவந்த டிடிவி தினகரன் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்தார்.

By admin