• Sun. Sep 7th, 2025

24×7 Live News

Apdin News

அதிமுக, பாமகவில் நிகழும் குழப்பங்களுக்கு பாஜகதான் முக்கிய காரணம்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு | BJP is the main reason for the chaos in ADMK and PMK: Selvapperundhagai

Byadmin

Sep 7, 2025


திருநெல்வேலி: அ​தி​முக, பாமக​வில் நடக்​கும் குழப்​பங்​களுக்கு பாஜக​தான் முக்கிய காரணம் என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை கூறி​னார்.

நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: வாக்கு என்​பது ஒவ்​வொரு தனி மனிதனின் அடிப்​படை உரிமை. அந்த வாக்கு அதி​காரத்தை தேர்​தல் ஆணை​ய​மும், பாஜக​வும் சேர்ந்து பறித்து வரு​கின்​றன. இதை மக்​களுக்கு உணர்த்​தும் வகை​யில் நெல்​லை​யில் செப். 7-ல் (இன்​று) விழிப்புணர்வு மாநாடு நடத்​துகிறோம். இந்த மாநாட்​டில் அகில இந்​திய காங்​கிரஸ் பொறுப்​பாளர் அஜய்​கு​மார், முன்​னாள் மத்​திய நிதியமைச்​சர் ப.சிதம்​பரம் மற்​றும் நிர்​வாகி​கள் பங்​கேற்​கிறார்​கள்.

தமிழகத்​தில் பாஜக கூட்​டணி என்​பது ஒரு மூழ்​கும் கப்​பல். மக்​களால் நிராகரிக்​கப்​பட்ட கூட்ட​ணி. மக்​கள் எதிர்ப்பை உணர்ந்​த​தால்​தான் டிடி​வி.​தினகரன் கூட்ட​ணி​யில் இருந்து வெளி​யேறி​விட்​டார். பாஜக எங்கு இருக்​கிறதோ, அங்கு சர்வ நாசம்​தான் ஏற்​படும். மகா​ராஷ்டி​ரா​வில் சிவசே​னா,தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்​சிகளை உடைத்​தது​போல தமிழகத்​தில் அதி​முக 4 அணி​களாக சிதறிக் கிடப்​ப​தற்​கும், பாமக​வில் பிரச்​சினை நீடிப்​ப​தற்​கும் பாஜகவே காரணம். யார் ஒன்று சேர்ந்​தா​லும் இண்​டியா கூட்​ட​ணிக்கு எந்​தப் பாதிப்​பும் இல்​லை. எங்​கள் கூட்​டணி வலு​வாக உள்​ளது.

தமிழகத்​தில் காங்​கிரஸ் கட்சி உயிர்ப்​புடன் இருக்​கிறது. கிராமம் நோக்கி காங்​கிரஸ் என்ற திட்​டத்​தின்​கீழ் 80 சதவீதம் கிராமங்​களில் கமிட்​டிகளை அமைத்​து, உறுப்​பினர்​களுக்கு க்யூஆர் கோடுடன் கூடிய அடை​யாள அட்​டைகளை வழங்​கி​யுள்​ளோம். விரை​வில் கிராமக் கமிட்​டிப் பொறுப்​பாளர்​கள் 2 லட்​சம் பேரை அழைத்​து, ராகுல் காந்தி தலை​மை​யில் பிரம்​மாண்ட மாநாடு நடத்த உள்​ளோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். ராபர்ட் புரூஸ் எம்​.பி. ரூபி மனோகரன் எம்​எல்ஏ, நெல்லை மாநகர் மாவட்ட காங்​கிரஸ் தலை​வர் சங்​கர​பாண்​டியன் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.



By admin