• Sat. Apr 26th, 2025

24×7 Live News

Apdin News

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வீட்​டுக்கு வெடிகுண்டு மிரட்​டல் | Bomb threat to aidmk general secretary palaniswami house

Byadmin

Apr 26, 2025


சென்னை: அதி​முக பொதுச்​செய​லா​ள​ரும், எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான பழனி​சாமி, சென்னை ராஜா அண்​ணா​மலைபுரம் கிரீன்​வேஸ் சாலை​யில் உள்ள அரசு பங்​களா​வில் வசித்து வரு​கிறார். இந்​நிலை​யில் அவருக்​கும், புதுச்​சேரி​யில் உள்ள ஜிப்​மர் மருத்​து​வ​மனைக்​கும் நேற்று மாலை 5 மணி​யள​வில் இ-மெ​யில் வாயி​லாக வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது.

தகவலறிந்த உடன் வெடிகுண்​டு​களைக் கண்​டறிந்து அகற்​றும் பிரி​வினர், பழனி​சாமி வீட்​டுக்கு விரைந்து சென்​று, சோதனை செய்​தனர். மெட்​டல் டிடெக்​டர், மோப்ப நாய் மூலம் அங்கு பல மணி நேரம் சோதனை நடை​பெற்​றது.

ஆனால் எந்த வெடி பொருளும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை. அதே​போல் பழனி​சாமி, சட்​டப்​பேரவை செல்​லும் வழி​யிலும் சோதனை மேற்​கொள்​ளப்​பட்​டது. அங்​கும் வெடிபொருள் எது​வும் கிடைக்​க​வில்​லை. ஜிப்​மர் மருத்​து​வ​மனை​யிலும் வெடிகுண்டு கண்​டெடுக்​கப்​பட​வில்​லை.

இதனால் அந்த மின்​னஞ்​சல் வதந்தி என்​பது போலீ​ஸாருக்கு தெரிய​வந்​தது. இதுதொடர்​பாக அபி​ராமபுரம் போலீ​ஸார் வி​சா​ரித்து வருகின்றனர்.



By admin