4
உலகம் வியந்து
நம்மைப் பார்க்கும்.
நம்மிடம் இருக்கும்
ஆற்றலைக் கண்டு.
அவை எல்லாம்
வரலாறாக மட்டுமே
மாறிடல் கூடாது.
சோழர் வீரம் போல்.
வாழ்ந்து காட்டிய
வீரத் தலைவர்
வளர்த்த வளர்ப்பு
வாழ்ந்திட வேண்டும்.
எழுத்திலும் செயலிலும்
நமக்கு நிகர் நாம்தான்;
செய்து காட்டி வாழ்ந்திட
வாய்ப்பை ஆக்கிட வேண்டும்.
கருவேங்கை செயலும்
அகிம்சை திலீபன் வாழ்வும்
உலகில் இனியொன்று
இப்படி இருக்காதென்று.
பெருமை கொண்டு
அவை வாழ்ந்திட
நித்தம் பேசிட வேண்டும்.
அடுத்த தலைமுறைக்கு.
எத்தடை வரினும்
அத்தடைகள் உடைத்து
வாழ்ந்து காட்டிய பெருமை
ஈழத்தமிழர்க்கு உண்டு.
வென்றிட வேண்டும்.
சுய பொருளாதாரம்
அதை உருவாக்கி நாம்
தனித்து வாழ்ந்து காட்டி;
நதுநசி