• Mon. Oct 13th, 2025

24×7 Live News

Apdin News

அநாகரிகமாக பேசி தரம் தாழ்ந்த அரசியலை செய்கிறார் பழனிசாமி: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு  | Selvaperunthagai slams EPS

Byadmin

Oct 13, 2025


சென்னை: அ​தி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அநாகரி​க​மாக பேசிதரம் தாழ்ந்த அரசி​யல் செய்​கிறார் என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டம் அமலாகி 20 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நேற்று சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் செல்வப்பெருந்தகை கூறிய​தாவது: ஐக்​கிய முற்​போக்கு கூட்​டணி ஆட்​சி​யில் மன்​மோகன்​சிங் பிரதம​ராக இருந்​த​போது கொண்​டு​வந்த தகவல் அறி​யும் உரிமை சட்​டத்தை மத்​திய பாஜக அரசு நீர்த்​துப் போகச் செய்​யும் வேலை​யில் ஈடு​பட்​டுள்​ளது. ஆர்​டிஐ-​யில் மத்​திய பாஜகஅரசு மேற்​கொண்ட திருத்​தங்​களை ரத்து செய்ய வேண்​டும்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி ஒரு​மை​யிலும், கொச்சைபடுத்தியும் பேசி தரம்​தாழ்ந்த அரசி​யலை செய்​கிறார். எங்​களை வம்​புக்கு இழுத்து அநாகரி​க​மாக பேசி வரு​கிறார். நாங்​கள் மக்​கள் பிரச்​சினை​களில் எந்த சமரசம் செய்து கொள்​ளாமல், கூட்​ட​ணி​யில் இருந்​த​தா​லும் மக்​கள் பிரச்​சினைக்​காக குரல் கொடுத்து வரு​கிறோம். கூட்​ட​ணி​யில் கூடு​தல் தொகு​தி​கள், ஆட்​சி​யில் பங்கு என தலை​வர்​கள் தங்​கள் விருப்​பங்​களை வெளிப்​படுத்​துகின்​றனர்.

அது​போன்று நான் பொது​வெளி​யில் பேச முடி​யாது. நாங்​கள் கூடு​தல் தொகுதி கேட்​க​வில்லை என யார் சொன்​னது. எங்​களு​டைய பிரச்​சா​ரங்​களை ஆரவாரம் இல்​லாமல், உயி​ரிழப்பு இல்​லாமல் செய்து வரு​கிறோம். எங்​கள் தேர்​தல் பிரச்​சா​ரத்தை கடந்த ஜனவரி​யிலேயே தொடங்​கி​விட்​டோம். இவ்​வாறு தெரி​வித்​தார். இதனிடையே கட்​சி​யின்மேலிட பார்​வை​யாளர் கிரிஸ்சோடங்​கர் தலை​மையில் எம்​எல்ஏக்​கள் மற்​றும் கட்சி நிர்​வாகி​கள் மற்​றும் சொத்து பாது​காப்பு குழு உறுப்​பினர்​களு​டன் இன்று ஆலோ​சனைக் கூட்​டம்​ நடை​பெறுகிறது.



By admin