• Sat. Apr 19th, 2025

24×7 Live News

Apdin News

அநுர தேர்தல் இலஞ்சம்! – சுமந்திரன் சீற்றம்

Byadmin

Apr 18, 2025


“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று வியாழக்கிழமை மன்னாரில் ஆற்றிய தேர்தல் பிரசார உரை முற்றும் முழுதாக தேர்தல் விதிமுறை மீறலாகும். ஒருவகையில் தேர்தலில் மக்களுக்கு இலஞ்சம் கொடுப்பது போன்ற ஓர் உரையை அங்கு அவர் நிகழ்த்தியிருக்கின்றார்.”

– இப்படி சீற்றத்துடன் கருத்து வெளியிட்டிருக்கின்றார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.

மன்னார் நகர சபைக்குத் தமது தேசிய மக்கள் சக்தியினரை மக்கள் தெரிவு செய்தால், அந்த நிர்வாகத்தின் திட்டங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு நாம் அங்கீகாரம் வழங்கி நிதி ஒதுக்கீடு செய்வோம். வேறு தரப்பிடம் நிர்வாகம் போனால் அவர்களின் திட்டங்கள் குறித்து ஒன்றுக்குப் பத்துத் தடவை பரிசீலித்தே முடிவெடுப்போம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்கு உரையாற்றி இருக்கின்றார் எனச் சுமந்திரன் சுட்டிக்காட்டுகின்றார்.

”இந்த உரை அப்பட்டமாக தேர்தல் விதிமுறை மீறலாகும். இது தொடர்பில் நாம் தேர்தல் ஆணையத்திடம் உத்தியோகபூர்வமாக முறையிட இருக்கின்றோம்.

மக்களுக்கு இலஞ்சம் கொடுத்து வாக்குத் திரட்டும் சமயோசித பாணியே இந்த உரை. இதற்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோருவோம்.” – என்று சுமந்திரன் கூறியிருக்கின்றார்.

The post அநுர தேர்தல் இலஞ்சம்! – சுமந்திரன் சீற்றம் appeared first on Vanakkam London.

By admin