• Tue. Nov 5th, 2024

24×7 Live News

Apdin News

அந்த ஒரு சீன்.. பதட்டம் அழுகை.. மனதை பிழிந்த சாய் பல்லவி.. விருது நிச்சயம்

Byadmin

Nov 5, 2024


சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் குவிந்து வருகிறது. படத்தை தியேட்டரில் பார்த்த பலர், கனத்த இதயத்தோடு தியேட்டரை விட்டு செல்வதை பார்க்க முடிகிறது. அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தரவில்லை, சாய் பல்லவிக்கும் இப்படம் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. 2014ஆம் ஆண்டு இந்தியாவையே உலுக்கிய புல்வாமா தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, உருவாக்கப்பட்ட படம் தான் அமரன்.

அந்த தாக்குதலின் போது மக்களை காக்க, தன் உயிரை துச்சம் என நினைத்து நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர் தான் மேஜர் முகுந்த் வரதராஜன். இவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்தள்ளார். முகுந்தின் மனைவி, அப்பா,அம்மா, மாமனார் என ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தேடி தேடி எடுத்து இப்படத்திற்காக மிகவும் மெனக்கெட்டுள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.

மனதை கலங்கவைத்த கதை: முகந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாப்பாத்திரத்தில், சாய் பல்லவி நடித்திருக்கிறார். அமரன் திரைப்படம் உண்மை கதை என்பதால், இந்த படத்தின் கதை என்ன, படத்தின் முடிவு என்ன என்று படத்தை பார்ப்பதற்கு முன்பே அனைவருக்குமே தெரிந்தாலும், படத்தின் திரைக்கதை, வசனம் என அனைத்தும் படத்திற்கு வெற்றி வாகையை சூட்டி உள்ளது எனலாம். அமரன் படத்தை பார்த்த அனைவரும் நிச்சயம் ஏதாவது ஒரு சூழ்நிலையில், கலங்கி இருப்பார்கள்.

பதற்றம், அழுகை, தவிப்பு: படத்தின் ஒரு காட்சியில் சிவகார்த்திகேயன் வாகனத்தில் நண்பர்களுடன் சென்று கொண்டு இருக்கும் போது, அன்பே சிவம் படத்தில் வரும் “யார் யார் சிவம் அன்பே சிவம்” பாடலை பாடிக்கொண்டு செல்வார்கள் அப்போது, சாய் பல்லவி போனில் சிவாவுடன் பேசிக்கொண்டு இருப்பார்.

அந்த நேரம் ஒரு துப்பாக்கி சத்தம். அடுத்த ஐந்து நொடி துப்பாக்கி சத்தம், வெடிகுண்டு சத்தம், ராணுவ வீரர்களின் அலறல் சத்தம் மட்டுமே கேட்கும். அந்தக் காட்சி முழுக்க பதற்றமானதாகவே இருக்கும், போனில் இருக்கும் சாய் பல்லவி என்ன நடக்கிறது, கணவனுக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் தவித்துக்கொண்டு இருப்பார். நிச்சயம் விருது கிடைக்கும்: அந்த ஒரே காட்சியில் சாய் பல்லவி அனைவரின் மனதையும் வென்றுவிட்டார், ஏன்னா அந்த அளவிற்கு பதட்டம், அழுகை, தவிப்பு என அனைத்தையும் அவ்வளவு அழகா வெளிப்படுத்தி இருந்தார்.

கடைசியில் சிவகார்த்திகேயன் “I’m Fine” னு சொல்ற வரைக்கும் அந்தக் குரல் நடுக்கத்தையும், மனதின் தவிப்பையும் நடிப்பில் காட்டி இருந்தார். அதன் பின் அந்த நிம்மதியையும் சாய் பல்லவியின் கண் வழியாக நம்மால் உணர முடிந்தது.

கார்கி திரைப்படத்தில் முழு நடிகையாக ஜொலித்த சாய் பல்லவி, அமரன் படத்தில், அனைவரின் மனதிலும் இந்து ரெபேக்கா வர்கீஸாகவே வாழ்த்துவிட்டார். அமரன் திரைப்படம் சாய் பல்லவிக்கு ஒரு மைல்கல் திரைப்படமாகவே அமைந்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு சாய் பல்லவிக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து சாய் பல்லவியை கொண்டாடி வருகின்றனர்.

நன்றி : tamil.filmibeat.com

By admin