• Tue. Dec 16th, 2025

24×7 Live News

Apdin News

அனர்த்தத்தின் பின்னர் டெங்கு நோய் பரவும் வாய்ப்பு அதிகரிப்பு!

Byadmin

Dec 16, 2025


நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர் டெங்கு நோய் பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் கபில கன்னன்கர தெரிவித்துள்ளார்.

கொழும் 07இல் உள்ள இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் கபில கன்னன்கர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் கடந்த வாரத்தில் மாத்திரம் 616 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 263 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 146 டெங்கு நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 57 டெங்கு நோயாளர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 டெங்கு நோயாளர்களும், குருணாகல் மாவட்டத்தில் 26 டெங்கு நோயாளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 68 டெங்கு நோயாளர்களும், கேகாலை மாவட்டத்தில் 20 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலையின் பின்னர் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மழை காலத்தில் தான் பெரும்பாலும் டெங்கு நோய் பரவுகிறது. மக்கள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் டெங்கு நோய் பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளமை பாரதூரமான விடயமாகும்.

எனவே டெங்கு அபாயமிக்க பகுதிகளில் டெங்கு நோய்க்கான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

By admin