• Wed. Apr 1st, 2026

24×7 Live News

Apdin News

அனுஷ்காவின் முதல் மலையாள பட டிரெய்லர் வெளியானது!

Byadmin

Mar 31, 2026


கேரளாவின் புகழ்பெற்ற மாந்திரீக பாதிரியார் கடமட்டத்து கத்தனாரின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ளப் படம் “கத்தனார்: தி வைல்ட் சோர்சரர்”.

இப்படத்தில் நடிகர் ஜெயசூர்யா கத்தனார் வேடத்திலும், நடிகை அனுஷ்கா ஷெட்டி ஒரு முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இது அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் முதல் மலையாளத் திரைப்படமாகும்.

நடிகர் பிரபுதேவாவும் இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் மோகன்லால் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை ரோஜின் தாமஸ் இயக்கியுள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துவருகிறது.

By admin