• Mon. Jun 30th, 2025

24×7 Live News

Apdin News

அன்புமணியின் பின்னால் இருப்பது நிர்வாகிகள்; ராமதாஸின் பின்னால் வாக்காளர்கள்: எம்எல்ஏ அருள் கருத்து | MLA Arul says Administrators are behind Anbumani and voters are behind Ramadoss

Byadmin

Jun 30, 2025


சேலம்: அன்​புமணி​யின் பின்​னால் கட்சி நிர்​வாகி​கள் மட்​டும்​தான் உள்​ளனர். ராம​தாஸின் பின்​னால் வன்​னியர்​கள், வாக்​காளர்​கள் உள்​ளனர் என்று பாமக எம்​எல்ஏ அருள் கூறினார்.

சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: ராம​தாஸைப் பற்றி எவருமே சொல்​லாத, சொல்​லத் தயங்​கிய வார்த்​தைகளை அன்​புமணி பேசி​யது வேதனை அளிக்​கிறது. கொலை, கொள்ளை வழக்​கில் உள்​ளவர்​கள், சாலை​யோரம் இலந்​தைப் பழம் விற்​பவர்​களுக்கு ராம​தாஸ் பொறுப்​பு​களை வழங்​கி​யிருப்​ப​தாக அன்​புமணி கூறி​யுள்​ளார். பாட்​டாளி வர்க்​கத்​தினரை அன்​புமணி இழி​வுபடுத்தி விட்​டார்.

ராம​தாஸைச் சுற்றி 3 தீய சக்​தி​கள் இருப்​ப​தாக அன்​புமணி கூறுகிறார். ஆனால், அன்​புமணி​யைச் சுற்​றித்​தான் தீய சக்​தி​கள் உள்​ளன. கடந்த 5 ஆண்​டு​களாக ராம​தாஸ் குழந்​தை​போல இருப்​ப​தாக அன்​புமணி விமர்​சித்​துள்​ளார். எனில், 3 ஆண்​டு​களுக்கு முன்பு பாமக தலை​வ​ராக அன்​புமணியை ராம​தாஸ் அறி​வித்​தது எப்​படி செல்​லும்? ராம​தாஸ் பின்​னால் வன்​னியர்​கள், சிறு​பான்​மை​யினர், வாக்​காளர்​கள் இருக்​கின்​றனர். ஆனால், அன்புமணி​யின் பின்​னால் கட்சி நிர்​வாகி​கள் மட்​டுமே உள்​ளனர்.

எங்கள் உயிருக்கு ஆபத்து.. சேலத்​தில் அன்​புமணி போட்டியிட்​டால், அவரது வெற்​றிக்​காக நான் உழைப்​பேன். அன்​புமணியின் ஆதர​வாளர்​களால், என்​னைப் போன்​றவர்​களின் உயிருக்கு ஆபத்து ஏற்​பட்​டுள்​ளது. 2026 தேர்​தலில் ராம​தாஸ் வெற்​றிக் கூட்​ட​ணியை அமைப்​பார். எதிர்​கால பாமக அன்​புமணிக்​குத்​தான். இதில் மாற்​றம் இல்​லை. ஆனால், அன்​புமணி பொறுத்​திருக்க வேண்டும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.



="a2a_kit a2a_kit_size_32 addtoany_list" data-a2a-url="https://24x7livenewz.com/tamil/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0/8260168/" data-a2a-title="அன்புமணியின் பின்னால் இருப்பது நிர்வாகிகள்; ராமதாஸின் பின்னால் வாக்காளர்கள்: எம்எல்ஏ அருள் கருத்து | MLA Arul says Administrators are behind Anbumani and voters are behind Ramadoss">

By admin