• Wed. Aug 20th, 2025

24×7 Live News

Apdin News

அன்பும், விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும்: 50-வது மணநாளில் ஸ்டாலின் நெகிழ்ச்சி | Love and conceding is important to keep married life happy: CM Stalin throws piece of advice

Byadmin

Aug 20, 2025


சென்னை: எதிர்பார்ப்புகளற்ற அன்பும், விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என தனது 50-வது திருமண நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைய தலைமுறையினருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “அரைநூற்றாண்டாக என் வாழ்வின் துணையாக – என்னில் பாதியாக துர்கா அவர்கள் நுழைந்து, தன்னுடைய அன்பால் மணவாழ்வை மனநிறைவான வாழ்க்கையாக அளித்துள்ளார். அவர் மீதான அளவற்ற அன்பே என் நன்றி.

எதிர்பார்ப்புகளற்ற அன்பும் – விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொள்கிறோம். வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட விழைகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று, திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர். அது தொடர்பாக பகிரப்பட்ட பதிவில், “உயிரென உறவென திருமிகு துர்கா அவர்கள் என்னில் பாதியாய் இணைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன.

இத்தருணத்தில் பேரன்புகொண்டு இல்லம்தேடி வந்து எங்களை வாழ்த்திய கொள்கை உறவுகளான தோழமை இயக்கத் தலைவர்களுக்குக் குடும்பப் பாச உணர்வுடன் நன்றி கூறி அகமகிழ்கிறேன்.” என்று முதல்வர் குறிப்பிட்டிருந்தார்.



By admin