• Tue. Dec 30th, 2025

24×7 Live News

Apdin News

அன்று ராப் பாடகர் இன்று பிரதமர் வேட்பாளர் ; நேபாள அரசியலில் பாலன் ஷா 3 ஆண்டுகளில் வளர்ந்தது எப்படி?

Byadmin

Dec 30, 2025


தேர்தலில் போட்டியிட ஒப்பந்தம்

பட மூலாதாரம், KP Khanal

படக்குறிப்பு, நேபாளத்தில் பாலன் ஷா மற்றும் ஆர்எஸ்பி இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டது

பாலன் ஷா என்று அழைக்கப்படும் காத்மாண்டு மாநகர மேயர் பாலேந்திர ஷா, ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நேபாளத் தேர்தலில் இணைந்து போட்டியிட பாலன் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சி (ஆர்எஸ்பி) இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

பிபிசி நேபாளி மொழி சேவையின் தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரு தரப்புக்கும் இடையே ஏழு அம்ச ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி, வரவிருக்கும் தேர்தல்களில் பாலன் ஷா நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் இருப்பார். ரவி லாமிச்சானே ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சியின் மத்தியத் தலைவராக இருப்பார்.

இரு கட்சிகளின் இணைப்பிற்குப் பிறகு உருவாகும் கட்சியின் பெயர் ‘ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சி’ என்றே நீடிக்கும் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

By admin