• Mon. Apr 20th, 2026

24×7 Live News

Apdin News

அப்துல் வஹாப்: பாகிஸ்தான் சுரங்க விபத்தில் 16 நாளுக்குப் பின் ஒருவர் உயிருடன் மீட்பு – எப்படி?

Byadmin

Apr 20, 2026


அப்துல் வஹாப் 17-வது நாளில் உயிருடன் மீட்கப்பட்டார்.

பட மூலாதாரம், QASIM

படக்குறிப்பு, அப்துல் வஹாப் 17-வது நாளில் உயிருடன் மீட்கப்பட்டார்.

ஒரு பெரிய விபத்து நிகழும்போது, ​​அதில் சிக்கிக்கொண்டவர்களின் நிலைமை குறித்து அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலையடைகின்றனர்.

ஆனால், நாம் யாரைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தோமோ, அந்த நபர் உயிருடன் இருக்கிறார் என்பதை நாம் திடீரென்று அறியும்போது, ​​அந்தக் குடும்பத்துக்கு ஏற்படும் மகிழ்ச்சி எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதை நம்மால் கற்பனைகூடச் செய்து பார்க்க இயலாது.

ஆனால் அப்துல் வஹாபின் குடும்பத்தினருக்கு, இந்தச் செய்தி மகிழ்ச்சியானது மட்டுமல்லாமல், மிகவும் ஆச்சரியமானதாகவும் இருந்தது. அதை நம்புவது அவர்களுக்கு மிகவும் கடினமாகவும் இருந்தது.

ஏனெனில், ஒரு கோர விபத்துக்குப் பிறகு, அப்துல் வஹாப் இறந்துவிட்டதாக எண்ணி அவர்கள் வேறொரு சடலத்தை அடக்கம் செய்தனர். ஆனால், 16 நாட்களுக்குப் பிறகு, அப்துல் வஹாப் உயிருடன் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மார்தான் மாவட்டத்தின் ருஸ்தம் பகுதியில் பளிங்குக் கல் குவாரிகள் அமைந்துள்ளன.

By admin