• Sun. Dec 14th, 2025

24×7 Live News

Apdin News

அமெரிக்கப் படைகள் குவிப்பு: வெனிசுவேலாவுக்கு உதவ ரஷ்யா, சீனா முன்வராதது ஏன்?

Byadmin

Dec 14, 2025


அமெரிக்கா - வெனிசுலா, ரஷ்யா, சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்யா பல ஆண்டுகளாக வெனிசுலாவிற்கு ராணுவ ஆதரவை வழங்கி வருகிறது.

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தனது உண்மையான நண்பர்கள் யார் என்று யோசிப்பது தற்போது இயல்பானதாக இருக்கலாம்.

ஏனென்றால் முன்பு சீனா, ரஷ்யா மீது இருந்த வெனிசுவேலாவின் வலுவான நம்பிக்கை இப்போது நிச்சயமற்றதாக மாறியுள்ளது.

பல ஆண்டுகளாக, இந்த இரண்டு நாடுகளும் வெனிசுவேலாவின் சோசலிச அரசாங்கத்திற்கு அரசியல், பொருளாதாரம் மற்றும் ராணுவ ஆதரவை வழங்கின. இந்த உறவு மதுரோவின் வழிகாட்டியும் முன்னாள் அதிபருமான ஹியூகோ சாவேஸ் காலத்தில் தொடங்கியது.

ஆனால், இந்த ஆதரவு இப்போது பெரும்பாலும் ஒரு அடையாளமாக மட்டுமே மாறிவிட்டது என்றும், உறுதியான ராணுவ அல்லது பொருளாதார உதவியைக் காட்டிலும் வெறும் வார்த்தைகளாக மட்டுமே ஆதரவு உள்ளது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்கா கரீபியன் கடலில் தனது விமானப்படை மற்றும் கடற்படை, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், உளவு விமானங்கள் மற்றும் 15,000 துருப்புகளை நிலைநிறுத்தியுள்ள நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

By admin