• Fri. Mar 20th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவால் 7000 இலக்குகள் தாக்கப்பட்ட பிறகும் இரான் பதிலடி தொடர்வது எப்படி?

Byadmin

Mar 20, 2026


கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

இரான் உடனான போரில் அமெரிக்கா “திட்டமிட்டபடியும்”, “இலக்கின் மீதும்” சரியாக இருப்பதாக தெரிவித்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்பதற்கு துல்லியமான கால வரம்பை வழங்கவில்லை.

நேற்று செய்தியாளர்கள் வலியுறுத்திக் கேட்டபோது, “ஒரு குறிப்பிட்ட கால வரம்பை நிர்ணயிக்க நாங்கள் விரும்பவில்லை.” எனத் தெரிவித்தார்.

அமெரிக்கா தற்போது 7,000 இரானிய இலக்குகளைத் தாக்கியதாகக் கூறும் அவர், “படைகளுக்கு தாங்கள் எதை தாக்குகிறோம், ஏன் தாக்குகிறோம் என்பது பற்றிய தெளிவான உணர்வு இருக்கிறது.” என்றார்.

குவைத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் எரிந்த கட்டடம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குவைத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் எரிந்த கட்டடம்

பூமிக்கு அடியில் இரானின் ஆயுதங்கள்

பீட் ஹெக்செத் கூற்றுப்படி அமெரிக்கப் படைகளால் மட்டுமே 7,000 இரானிய இலக்குகள் தாக்கப்பட்ட போதிலும், இரானிய ஏவுகணைகளும் டிரோன்களும் இன்னும் அண்டை நாடுகளைத் தாக்கி வருகின்றன.

குறிப்பிடத்தக்க விமானப்படை மற்றும் கடற்படை இல்லாத நிலையில், இந்த ஏவுகணைகளையும் டிரோன்களையும்தான் இரான் தன்னால் இயன்ற வழிகளில் பாதுகாக்க முயல்கிறது.

By admin