• Fri. Aug 15th, 2025

24×7 Live News

Apdin News

அமெரிக்காவிடம் அலாஸ்காவை ரஷ்யா விற்றது ஏன்? ஒரு வரலாற்றுப் பார்வை

Byadmin

Aug 15, 2025


ரஷ்யா, அமெரிக்கா, யுக்ரேன், அலாஸ்கா, டொனால்ட் டிரம்ப், விளாடிமிர் புதின்

பட மூலாதாரம், Hulton Archive/Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் சீவர்ட் அலாஸ்காவை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தினார்.

யுக்ரேனில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அலாஸ்காவில் நடைபெறவுள்ள உச்சி மாநாடு, கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த மிக முக்கியமான ராஜதந்திர முன்னேற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்த சந்திப்பு நடைபெறும் இடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

அதிபர்கள் டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புதின், அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஆங்கரேஜில், அமெரிக்க நிலப்பரப்பில் சந்திக்கவுள்ளனர்.

ஆனால், சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றிருந்தால், அது ரஷ்ய நிலப்பரப்பில் நடந்திருக்கும்.

ஏனெனில், தற்போது அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலமாகவும், மொத்த நாட்டின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை உள்ளடக்கியதுமான அலாஸ்கா, ஒரு காலத்தில் ரஷ்யாவிற்கு சொந்தமாக இருந்தது.

By admin