• Wed. Aug 27th, 2025

24×7 Live News

Apdin News

அமெரிக்காவின் 50% வரி நாளை அமல் – தமிழ்நாட்டில் தாக்கம் ஏற்படும் 5 துறைகள்

Byadmin

Aug 27, 2025


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50% இறக்குமதி வரி (tariff) புதன்கிழமை (ஆகஸ்ட் 27) முதல் அமலுக்கு வர இருக்கிறது.

கடந்த சில மாதங்களில் பல்வேறு கட்டங்களாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் 48.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு உள்ளாகும் என கணக்கிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்பால் பல்வேறு துறைகளின் உற்பத்தி பாதிக்கப்படும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

By admin