• Mon. Jan 19th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவிலும் குழந்தை திருமணமா? சிறுமிகளுக்கு எவ்வாறு, ஏன் திருமணம் செய்யப்படுகிறது?

Byadmin

Jan 19, 2026


அமெரிக்கா, சிறார் திருமணம், பெண் கல்வி, பெண்கள், சட்டபூர்வ திருமணம், திருமண சிக்கல்கள், குழந்தைத் திருமணம்

பட மூலாதாரம், Given to the BBC by Patricia Lane

படக்குறிப்பு, 13 வயதில் கர்ப்பமான பட்ரிசியா லேனுக்கு குடும்பத்தினர் கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர்

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பசுமையான மலைகளும் அழகாய் நதி பாயும் ரம்மியமான ஈடன் ப்ரேரி என்ற சிறிய நகரத்தில் பட்ரிசியா லேன் வளர்ந்தார். பலருக்கு இந்த இடம் அழகான வாழ்விடமாகத் தோன்றலாம். ஆனால் பட்ரிசியாவைப் பொருத்தவரையில், குழந்தைப் பருவத்தை தொலைத்த ஊராகவே நினைவில் இருக்கிறது.

“நானும் எனது சகோதரரும் கலாசார ரீதியாக மிகவும் தனிமைப்படுத்தப்பட்டோம். பெரிய அமெரிக்க நகரத்தின் புறநகர்ப் பகுதியில் நாங்கள் வாழ்ந்தபோதிலும், எங்களது வாழ்க்கை மிகவும் இறுக்கமானதாகவும் அடக்குமுறை நிறைந்ததாகவும் இருந்தது,” என்று பட்ரிசியா நினைவுகூர்கிறார்.

மிகவும் இளம் வயதிலிருந்தே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பட்ரிசியா கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளானார். தனது 12 வயதிலேயே அவசர உதவி மையம் ஒன்றை அவர் நாடினார்.

அங்குதான் அவரது கணவர் டிம்மை சந்தித்தார். ஒரு நாள் அவரது அழைப்பிற்குப் பதிலளித்த டிம், சில மாதங்களுக்குப் பிறகு பட்ரிசியாவின் கணவரானார்.

டிம்மிற்கு அப்போது 25 வயது, அவர் மதக் கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி பயின்றுக் கொண்டிருந்தார். அவரது மதப் பயிற்சியின் ஒரு பகுதியாக, அழைப்புகளுக்குப் பதிலளிக்கும் சிறிய அமைப்பு ஒன்றில் பணியமர்த்தப்பட்டார்.

By admin