• Wed. Feb 12th, 2025

24×7 Live News

Apdin News

அமெரிக்காவில் எஃகு, அலுமினியம் இறக்குமதிக்கு 25% வரி – டிரம்ப் உத்தரவால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

Byadmin

Feb 12, 2025


இந்த உலோகங்கள் அதிக அளவில் கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதும்  குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், EPA-EFE/REX/Shutterstock

படக்குறிப்பு, வரி அறிவிப்புக்குப் பிறகு, இது அமெரிக்காவிற்கு மட்டுமே பயனளிக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

  • எழுதியவர், சுர்பி குப்தா
  • பதவி, பிபிசி நிருபர்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு 25 சதவீத இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வரி அறிவிப்புக்குப் பிறகு, அமெரிக்காவில் இந்த உலோகங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரிக்கும் என அறியப்படுகின்றது.

கனடா அரசியல்வாதிகளின் எச்சரிக்கையையும் மீறி, டிரம்பின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த உலோகங்கள் அதிக அளவில் கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக, இறக்குமதியை நம்பியுள்ள அமெரிக்க வணிகங்களும் இந்த வரி நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்துள்ளன.

By admin