• Wed. Feb 18th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவில் சிறுமியை மீட்க ஒரு செங்கல் உதவியது எப்படி?

Byadmin

Feb 18, 2026


அமெரிக்கா, டார்க்வெப், சிறுமி மீட்பு, கிரெக் ஸ்கொயர்
படக்குறிப்பு, செங்கல் சுவர் மற்றும் ஒரு சிறுமியின் நிழல் உருவத்தின் பின்னணியில் கிரெக் ஸ்கொயர்

எச்சரிக்கை: இந்த கட்டுரையில் பாலியல் வன்கொடுமை பற்றிய விவரங்கள் உள்ளன

தனது குழுவினரால் லூசி என்று பெயரிடப்பட்ட ஒரு வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியை மீட்பதற்கான முயற்சியில் ஆன்லைன் விசாரணை நிபுணரான கிரெக் ஸ்கொயர் ஒரு முட்டுக்கட்டையைச் சந்தித்தார்.

மனதைக் கலங்கடிக்கும் அவளுடைய படங்கள் ‘டார்க் வெப்’ தளத்தில் பகிரப்பட்டு வந்தன. டார்க் வெப் தளம் என்பது உரிமையாளர்களைக் கண்டறிய முடியாதபடி வடிவமைக்கப்பட்ட, சிறப்பு மென்பொருளைப் பயன்படுத்தினால் மட்டுமே அணுகக் கூடிய இணையத்தின் என்க்ரிப்ஷன் (Encryption) செய்யப்பட்ட ஒரு மூலையாகும்.

அந்த அளவிலான ரகசியத்திலும் கூட, வன்கொடுமையாளர் “தனது தடயங்களை மறைப்பதில்” கவனமாக இருந்தார். அடையாளம் காணக்கூடிய எந்தவொரு அம்சத்தையும் வெட்டியோ அல்லது மாற்றியோ இருந்தார் என்று ஸ்கொயர் கூறுகிறார். லூசி யார் அல்லது எங்கே இருக்கிறாள் என்பதைக் கண்டுபிடிப்பது சாத்தியமற்றதாக இருந்தது.

அந்த 12 வயது சிறுமியின் இருப்பிடத்திற்கான குறிப்பு கண் முன்னாலேயே மறைந்திருப்பதை அவர் விரைவில் கண்டறிய இருந்தார்.

By admin