அமெரிக்கா – பென்சில்வேனியா மாநிலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரிகள் மூவர் கொல்லப்பட்டனர். அத்துடன், இரு பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்தனர்.
இத்துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர், பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஒரு குடும்பப் பிரச்சினை குறித்து விசாரிக்க பொலிஸார் சென்றிருந்த போது அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக மாநில பொலிஸ் தலைவர் கூறினார். கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.
அதேவேளை, பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷப்பிரோ, கொல்லப்பட்ட அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தினார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்காகப் பிரார்த்திக்கும்படி அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசாங்கம் தேவையான உதவியை வழங்கும் என்று தலைமைச் சட்ட அதிகாரி பெம் பொண்டி தெரிவித்திருப்பதாகவும் ஆளுநர் மேலும் கூறினார்.
The post அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; பொலிஸார் மூவர் கொலை; கொலையாளியும் கொல்லப்பட்டார்! appeared first on Vanakkam London.