• Fri. Aug 22nd, 2025

24×7 Live News

Apdin News

அமெரிக்காவுடனான நட்புறவு குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் விடுக்கும் எச்சரிக்கை என்ன?

Byadmin

Aug 22, 2025


பாகிஸ்தான் ராணுவத் தலைவர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் ராணுவத் தலைவர் சமீபத்தில் இரண்டு முறை அமெரிக்காவிற்கு பயணம் செய்துள்ளார்.

இந்தியா-அமெரிக்க உறவுகள் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும் இந்த நேரத்தில், நீண்டகால ராஜ்ஜீய மோதலுக்குப் பிறகு, அமெரிக்கா பாகிஸ்தானுடன் ஒத்துழைப்பை உருவாக்க முயற்சிக்கிறது.

சமீப காலங்களில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், பிராந்திய நிலைத்தன்மை, பொருளாதார கூட்டணி மற்றும் உயர் மட்ட ராஜ்ஜீய சந்திப்புகள் ஆகியவற்றில் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மேம்படுத் தொடங்கியுள்ளன.

வரலாற்று ரீதியாக , பனிப்போர் காலம் மற்றும் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு ஒத்துழைப்பின் தொடக்க காலங்களில் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்தது.

ஆனால், காலப்போக்கில் அந்த உறவு பலவீனமடைந்து, இடையிடையே பதற்றங்கள் உருவாகின.

By admin