• Sat. Mar 7th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவுடன் என்ன ஒப்பந்தம் | அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் | சுஜீவ சேனசிங்க 

Byadmin

Mar 7, 2026


அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.அமெரிக்காவின் செயற்பாடுகள் இலங்கைக்கும் அச்சுறுத்தலாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற  அவசரகால சட்டம் அமுலாக்கம்  நீட்டிப்பு  தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஈரான் கப்பல் விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட கருத்துக்களை முன்னிலைப்படுத்தி ஆளும் தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். எதிர்க்கட்சியின் உறுப்பினர்களின் நிலைப்பாட்டுக்கு ஜனாதிபதி பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீது அமெரிக்கா தாக்கப்பட்டமை தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. இந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் இலங்கை மீதும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இலங்கை விளையாட்டு

அமெரிக்காவுடன்  கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில்  என்ன உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கத்திடம் பலமுறை கேட்டும் இதுவரையில் அந்த ஒப்பந்தம் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இலங்கை கடற்பரப்பில் தாக்குதல் நடத்தும் போது இலங்கை அமைதியாக இருக்க வேண்டும், தாக்குதலுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.

அதேபோல் இந்தியாவுடன் 08 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.இந்த ஒப்பந்தங்களும் இதுவரையில் பகிரங்கப்டுத்தப்படவில்லை. அமெரிக்கா மற்றும் இந்தியாவுடனான ஒப்பந்தங்களின் இரகசியத்தன்மையை பாதுகாப்பதன் பின்னணி என்ன? என்று கேள்வியெழுப்பினார்.

By admin