• Tue. Mar 18th, 2025

24×7 Live News

Apdin News

அமெரிக்காவை உலுக்கிய சூறாவளி – காணொளி

Byadmin

Mar 18, 2025


காணொளிக் குறிப்பு,

அமெரிக்காவை உலுக்கிய சூறாவளி – காணொளி

அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணங்களை சூறாவளிகள் தாக்கியதில் பலர் உயிரிழந்தனர். பல வீடுகள் சேதமடைந்தன. தெருக்களில் கார்கள் கவிழ்ந்தன.

மின்சாரம் கண்காணிப்பு தளமான பவர்அவுட்டேஜின் தரவுகளின்படி, 7 மாகாணங்களில் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான கட்டங்களில் மின்சாரம் இல்லை.

கிழக்கு லூசியானா, மேற்கு ஜார்ஜியா உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதால், மேலும் தீவிர வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கிழக்கு பகுதி முழுவதும் தீவிர வானிலை தொடர்ந்து நிலவி வருவதால் சில இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. திடீரென ஏற்படக்கூடும் வெள்ளம் ஆபத்தானவையாக இருக்கலாம் என தேசிய வானிலை சேவை கூறியுள்ளது.

சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்ட இடங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல என வானிலை ஆய்வு நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகள் காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

By admin