• Mon. Mar 9th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவை வீழ்த்த முடியாது என்றாலும் தப்பிக்க இரான் வைத்துள்ள உத்தி என்ன?

Byadmin

Mar 8, 2026


அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களின் தொடர்ச்சியான கூட்டு வான்வழித் தாக்குதல்கள் இரானின் ராணுவத் திறன்களைக் கணிசமாகக் குறைத்துள்ளதாகக் கூறுகின்றன.

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களின் தொடர்ச்சியான கூட்டு வான்வழித் தாக்குதல்கள் இரானின் ராணுவத் திறன்களைக் கணிசமாகக் குறைத்துள்ளதாக கூறுகின்றன.

“அவர்களின் வான் பாதுகாப்பு, விமானப்படை, கடற்படை மற்றும் தலைமைத்துவம் அழிந்துவிட்டன,” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டார்.

“அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள். நான், ‘மிகவும் தாமதமாகிவிட்டது!’ என்று சொன்னேன்”எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் மீதும் அமெரிக்க ராணுவத் தளங்களைக் கொண்டுள்ள மத்திய கிழக்கு நாடுகளின் மீதும் தாக்குதல்களை நடத்துவதன் மூலம் இரான் பதிலடி கொடுத்துள்ளது.

ஆனால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ராணுவ ரீதியாக மேலோங்கியிருப்பதாக பரவலாகக் கருதப்படும் நிலையில், இந்தப் போரில் தாக்குப்பிடிக்க இரானுக்கு என்ன வழிகள் உள்ளன?

By admin