• Sat. Feb 7th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் : எந்தெந்த அமெரிக்க பொருட்களுக்கு இந்திய சந்தை திறக்கப்பட்டுள்ளது? – பியூஷ் கோயல் கூறுவது என்ன?

Byadmin

Feb 7, 2026


அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுடன் செய்யப்பட்ட இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில், நாட்டின் விவசாயிகள் மற்றும் பால் துறையின் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன என்று இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சில வேளாண் பொருட்கள்மீது எந்த வரியும் விதிக்கப்படாது என்று கூறினார்.

கோயலின் கூற்றுப்படி, மசாலாப் பொருட்கள், தேநீர், காப்பி மற்றும் அவற்றின் தயாரிப்புகள், தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய், தாவர மெழுகு, பாக்கு, பிரேசில் நட்ஸ், முந்திரி, செஸ்நட் உள்ளிட்ட பல இந்திய வேளாண் பொருட்களுக்கு பூஜ்ஜிய வரி விதிக்கப்படும். மேலும், பல வகை பழங்கள் மற்றும் காய்கறிகளும் இந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றன.

அமெரிக்காவும் இந்தியாவும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து கோயல் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவின் சந்தை அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு திறக்கப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் மத்திய அரசை குற்றம்சாட்டி வந்த நிலையில், கோயலின் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய சந்தைக்கு திறக்கப்படும் அமெரிக்கப் பொருட்கள் எவை என்பதையும் அவர் விளக்கினார்.

By admin