• Tue. Mar 10th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா – இரானின் ஆயுத கையிருப்பு குறைந்தால் போர் எப்படி மாறும்? யாருக்கு அதிக பாதிப்பு?

Byadmin

Mar 10, 2026


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நாட்டிடம் முக்கியமான ஆயுதங்கள் “கிட்டத்தட்ட வரம்பற்ற அளவில் உள்ளன” என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம், US Navy via Getty Images

    • எழுதியவர், ஜோனாதன் பீல்
    • பதவி, பாதுகாப்பு செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நாட்டிடம் முக்கியமான ஆயுதங்கள் ‘கிட்டத்தட்ட வரம்பற்ற அளவில் உள்ளன’ என்று கூறியுள்ளார்.

மறுபுறம், அமெரிக்கா திட்டமிட்டதை விட நீண்ட காலம் ‘எதிரியை எதிர்த்து நிற்கும் திறன்’ எங்களிடம் உள்ளது என்று இரானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆயுத கையிருப்பு மற்றும் விநியோகம் மட்டும் இந்த மோதலின் முடிவை தீர்மானிக்காது. யுக்ரேன் நீண்ட காலமாக ரஷ்யாவைவிட குறைந்த வீரர்கள் மற்றும் குறைந்த ஆயுதங்களுடனும் போராடி வருகிறது. இருப்பினும் ஆயுதங்கள் ஒரு முக்கிய அம்சமாகும்.

தொடக்கத்திலிருந்தே இந்த ராணுவ நடவடிக்கைகளின் வேகம் மிக அதிகமாக உள்ளது. உற்பத்தி செய்யப்படுவதை விட வேகமான விகிதத்தில் இரு தரப்பினரும் ஏற்கனவே தங்களது ஆயுதங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

டெல் அவீவை சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் மதிப்பீட்டுப்படி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்கனவே 2,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஒவ்வொரு தாக்குதலிலும் பல்வேறு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

By admin