• Thu. Feb 19th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா இரான் அருகே போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை குவிப்பது ஏன்? பிபிசி புலனாய்வு

Byadmin

Feb 19, 2026


அமெரிக்கா - இரான்
படக்குறிப்பு, உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டையும் அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது அடுத்த மூன்று வாரங்களுக்குள் இப்பகுதிக்கு வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

    • எழுதியவர், ரிச்சர்ட் இர்வின்-பிரவுன்

    • எழுதியவர், அலெக்ஸ் முர்ரே
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரானுக்கு அருகே அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் நிலை கொண்டிருப்பதை செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியுள்ளது. இரானின் ராணுவத் திட்டம் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான அதன் ஒடுக்குமுறையைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஒரு தாக்குதல் குழுவை வழிநடத்தும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் எஃப்35 போர் விமானங்கள் உட்பட 90 விமானங்கள் மற்றும் 5,680 பணியாளர்களைக் கொண்டுள்ளது.

இது ஜனவரி பிற்பகுதியில் வளைகுடா பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது, ஆனால் இப்போது வரை செயற்கைக்கோள் படங்களில் காணப்படவில்லை. இது இரானில் இருந்து சுமார் 700 கிமீ தொலைவில் ஓமன் கடற்கரையில் உள்ளது.

உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டையும் அமெரிக்கா மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது அடுத்த மூன்று வாரங்களுக்குள் இப்பகுதிக்கு வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தற்போதைய ராணுவக் கட்டமைப்பைப் பற்றி நாம் அறிந்தவற்றோடு ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலின் வருகையும் இணைகிறது.

By admin