• Sat. Mar 28th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா – இரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தரானால் இந்தியாவுக்கு பின்னடைவா? மோதி மீது எழும் கேள்விகள்

Byadmin

Mar 28, 2026


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான் மத்தியஸ்தம், இந்தியா

பட மூலாதாரம், MANDEL NGAN/AFP via Getty Images

படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் மார்ச் 24 அன்று பிரதமர் நரேந்திர மோதியுடன் பேசினார், ஆனால் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் சாதகமான நிலையை அடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன (கோப்புப் படம்).

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை பாகிஸ்தானில் நடத்துவதற்கு சாத்தியம் இருப்பதாகக் கூறப்பட்டதில் இருந்து, மோதி அரசின் வெளியுறவுக் கொள்கை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன.

இதை அரசாங்கத்தின் ‘ராஜ்ஜீய தோல்வி’ என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதில் இந்தியா ‘தோல்வியடைந்துவிட்டதாகவும்’, பாகிஸ்தான் இந்த விஷயத்தில் முன்னிலை பெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி கடந்த சில நாட்களாக இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் தொடர்பில் உள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மார்ச் 24-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதியை அழைத்துப் பேசினார். ஆனால் ‘அமைதிப் பேச்சுவார்த்தையில்’ பாகிஸ்தானின் பெயர் குறிப்பிடப்படுவதை இந்தியாவுக்கு பின்னடைவாகச் சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

By admin