• Tue. Mar 24th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா – இரான் இடையே பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராக உருவெடுக்கிறதா? புதிய தகவல்

Byadmin

Mar 24, 2026


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, திங்கட்கிழமை அன்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன” என்று கூறினார்.

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் பாகிஸ்தான் ஒரு சாத்தியமான மத்தியஸ்தராக உருவெடுக்கக்கூடும் என்று பிபிசியின் வெள்ளை மாளிகை செய்தியாளர் பெர்ன்ட் டிப்ஷ்மேன் ஜூனியர், ஃபைனான்சியல் டைம்ஸ் மற்றும் ஆக்ஸியோஸ் ஆகிய இதழ்களின் செய்திகளை மேற்கோள் காட்டி கூறுகிறார்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்கா மற்றும் இரானின் மூத்த தலைவர்களின் சந்திப்பை இஸ்லாமாபாத்தில் நடத்தலாம் என்று பாகிஸ்தான் முன்மொழிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அமெரிக்காவோ அல்லது இரானோ இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராக உருவெடுத்திருப்பது ஆச்சர்யமளிக்கவில்லை என்று பல அமெரிக்க உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாகிஸ்தான் இரானுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது, ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்க நிர்வாகத்துடன் இணக்கமான உறவைக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீர் கடந்த ஆண்டு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் டிரம்பைச் சந்தித்தார்.

By admin