• Wed. Apr 8th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா – இரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட பாகிஸ்தான் எப்படி உதவியது?

Byadmin

Apr 8, 2026


அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் எவ்வாறு உதவியது?

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கடந்த சில வாரங்களாக அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் மத்தியஸ்தராக பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. (கோப்புப் படம்)

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, பாகிஸ்தானிலிருந்து சில நம்பிக்கையூட்டும் அறிகுறிகள் தென்பட்டன.

பெயர் குறிப்பிட விரும்பாத பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு வட்டாரம் பிபிசியிடம், அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராக செயல்பட்டு வருவதால், பேச்சுவார்த்தைகள் “வேகமாக” நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் சிறிய குழுவினர் என்றும் சூழல் “கடுமையாகவும் தீவிரமாகவும் இருந்தபோதிலும், போரை நிறுவத்துவதில் அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்றும் அந்த நபர் கூறினார்.

மேலும், தான் அதில் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் மத்தியஸ்தராக பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது.

By admin