• Thu. Mar 26th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா – இரான் இடையே மத்தியஸ்தம் செய்ய முன்வந்த பாகிஸ்தானுக்கு என்ன கிடைக்கும்?

Byadmin

Mar 26, 2026


அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை அன்று 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் தெரிவித்ததை அடுத்து, இந்தப் பேச்சுவார்த்தை குறித்த செய்திகள் பரவத் தொடங்கின.

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவும் இரானும் ஒப்புக்கொண்டால் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று ஷாபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக முன்வந்துள்ளது.

இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில் நடைபெறக்கூடும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை அன்று ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் தெரிவித்ததை அடுத்து, இந்தப் பேச்சுவார்த்தை குறித்த செய்திகள் பரவத் தொடங்கின.

இரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தும் முடிவு ‘ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும்’ அவர் தெரிவித்தார்.

இரான் இந்தப் பேச்சுவார்த்தைகளை மறுத்த போதிலும், விரைவில் பாகிஸ்தான் மூலமாக இந்நாடுகளுக்கு மத்தியஸ்தம் செய்யப்படுவதாக அறிக்கைகள் வெளியாகின.

By admin