• Thu. Mar 26th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா – இரான் ஒருவேளை பேச்சு நடத்தினால் நெதன்யாகுவுக்கு என்ன சிக்கல்?

Byadmin

Mar 26, 2026


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு, நெதன்யாகு, டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமையன்று டிமோனாவில் இரானியத் தாக்குதல் நடைபெற்ற இடத்துக்குச் சென்றார்.

இரானுடன் புதிய பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்த அமெரிக்காவின் திட்டங்கள் தொடர்பாகக் கலவையான சமிக்ஞைகள் வெளிவந்துள்ள நிலையில், மத்திய கிழக்கின் இரு பரம எதிரிகளான இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சண்டை தொடர்கிறது.

திங்களன்று இரானுக்குள் “பத்துக்கும் மேற்பட்ட” வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. தெஹ்ரானில் உள்ள இரானியப் புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் உளவுத்துறை அமைச்சகத்தின் கட்டளை மையங்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது. இரான் நேற்று இரவு வடக்கு மற்றும் தெற்கு இஸ்ரேலில் உள்ள இலக்குகள் மீது பல ஏவுகணைகளை ஏவியது.

வடக்கு டெல் அவிவில் அண்மையில் வெடிப்பு நிகழ்ந்த இடத்தைச் சுற்றி, பால்கனிகள் பெயர்ந்து விழுந்துள்ளன. குடியிருப்பு கட்டடங்களின் தொகுப்புக்கு நடுவே உருவான பள்ளத்தில், சுவர்களிலிருந்து கற்கள் உதிர்ந்துகொண்டிருக்கின்றன.

தாக்குதலில் இருந்து பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் நூலிழையில் தப்பித்த நிலையில், இரானிய ஏவுகணையின் நேரடித் தாக்குதல் இது என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

தாக்குதல் நிகழ்ந்த இடத்திற்குப் பின்னால் உள்ள சாலையில் வசிக்கும் ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், எச்சரிக்கை ஒலி எழுப்பியபோது பாதுகாப்பான புகலிடத்திற்குச் செல்ல அவருக்குப் போதுமான நேரம் கிடைக்கவில்லை என்றும், அவர் தனது வீட்டின் முன் வாசலை அடைந்த கணமே, அந்த வெடிப்பின் தாக்கத்தால் கதவு பலமாகத் திறக்கப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்தார்.

By admin