• Sat. Apr 11th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா – இரான் பேச்சுவார்த்தையில் காத்திருக்கும் 5 சவால்கள் என்ன?

Byadmin

Apr 11, 2026


இரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை, பாகிஸ்தான், இஸ்லாமாபாத், இஸ்ரேல் - லெபனான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பேச்சுவார்த்தைக்கான அமெரிக்க குழுவிற்கு துணை அதிபர் ஜேடி வான்ஸ் தலைமை தாங்கும் நிலையில் இரான் குழுவிற்கு அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் தலைமை தாங்குகிறார்.

பேச்சுவார்த்தைக்கான அரங்கம் தயார், பாதுகாப்பு பணியில் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், அணுகு சாலையை ஒட்டியுள்ள நடைபாதை கற்கள் மஞ்சள் மற்றும் கருப்பு நிற வண்ணம் பூசப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் காத்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்கா – இரான் இடையே பேச்சுவார்த்தை நடக்கவுள்ள பாகிஸ்தான் நேர்மறையான குரலை வெளிப்படுத்தி வருகிறது. மற்றவர்களைப் போல அல்லாமல் இரு தரப்பின் நம்பிக்கையையும் தான் பெற்றிருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது.

அமெரிக்க குழுவிற்கு தலைமை தாங்கும் துணை அதிபர் ஜேடி வான்ஸும் உற்சாகமாக இருக்கிறார்.

“இரானியர்கள் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்தால் நாங்கள் நிச்சயமாக உதவிக்கரம் நீட்டத் தயாராக இருக்கிறோம்,” என அமெரிக்காவிலிருந்து புறப்படுவதற்கு முன்பு வான்ஸ் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஒரு எச்சரிக்கையையும் அவர் விடுத்தார். “அவர்கள் எங்களை ஏமாற்ற முயற்சித்தால், அப்போது பேச்சுவார்த்தை குழு மிகவும் இணக்கமாக இல்லை என்பதை அவர்கள் கண்டறிவார்கள்,” என்றார் அவர்.

By admin