• Mon. Mar 2nd, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா – இரான் மோதலில் எந்த நாடு யார் பக்கம்? ஒரு தொகுப்பு

Byadmin

Mar 2, 2026


பல நாடுகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஆதரித்துள்ள நிலையில், சில நாடுகள் இரானுக்கு ஆதரவாக தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேலும் அமெரிக்காவும் சனிக்கிழமை அன்று இரான் மீது தாக்குதல் நடத்தின.

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, உலகம் இரண்டு முகாம்களாகப் பிரிந்திருப்பது போல் தோன்றுகிறது.

பல நாடுகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஆதரித்துள்ள நிலையில், சில நாடுகள் இரானுக்கு ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.

பல நாடுகள் மிகவும் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை எடுத்து நடுநிலையாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

இஸ்ரேலும் அமெரிக்காவும் சனிக்கிழமை இரான் மீது தாக்குதல் நடத்தின.

இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உட்பட பல முக்கிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உயிரிழந்தனர்.

By admin